

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் ரூ.4 லட்சம் கோடி கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
எந்தெந்த வங்கிக் கணக்கு களில் இவ்விதம் கணக்கில் காட்டப்படாத அதாவது வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகைகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளில் மொத்தம் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.7.34 லட்சம் கோடி என்று அவர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிக் கிளை களில் மொத்தம் ரூ.10,700 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.16,000 கோடி தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மேற்கொண் டுள்ளது.
செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் ரூ.25,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள் ளன.