இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்கிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. தற்போது மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டால் அது 100 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.
