

‘‘குளச்சல் அருகே துறைமுகம் கட்டுவது சரியல்ல. இந்த பிரச்சி னை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து முறையிடுவேன்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடியில் வர்த்தக துறைமுகம் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. இதுகு றித்து கேரள சட்டப்பேரவை யில் காங் கிரஸ் எம்எல்ஏ எம். வின்சென்ட் கேள்வி எழுப்பினார் . ‘‘விழிஞ்சம் துறைமுகத்தை படுகுழியில தள்ளவே குளச்சல் அருகே வேறொரு துறைமுகத் தை மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது’’ என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூ றியதாவது:
தமிழகத்தின் குளச்சல் அருகே வர்த்தக துறைமுகம் உருவாக் கும் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து மு றையிடு வேன். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளேன் . இந்த மாதத்துக்குள் பிரதம ரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். குளச்சலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் விழிஞ்சம் (கேரளாவில் உள்ளது) துறைமுகம் உருவாகி கொண்டி ருக்கும் போது, அதன் அருகி லேயே இன்னொரு துறைமுகம் உருவாக்குவது சரியல்ல. அர சுக்கு வரி செலுத்தும் மக்களின் பணத்தை இதுபோல் தவறான வழியில் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குளச்சல் அருகே துறைமுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு ஏற்கெனவே பிர தமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து கேரள எம்.பி.க்கள் 17-ம் தேதி (நாளை) ஒன்றாக கூடி விவாதிக்க உள்ளனர். அதன்பின் இந்தப் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பு வார்கள். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
-