

தியாகம் மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்ட எங்கள் சித்தாந்தம் பற்றி பெருமைப் படுகிறேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு பதிலடி தரும் வகையில் மோடி இவ்வாறு கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பக்பத் என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், “கொள்கையின் வழிவந் தவன் என்பதில் நான் பெருமைப் படுகிறேன். குடும்பத்தை விட சமூகம் உயர்வானது என்பதே எங்கள் கொள்கை. எங்களுக்கு எல்லாமே இந்தியத் தாய் நாடு தான். நாட்டுக்காக வாழ்வோம், நாட்டுக்காக மடிவோம் என்பதே எங்கள் கொள்கை.
இந்தக் கொள்கையுடன் காங்கிரஸ் போட்டிபோட முடியாது. இந்தக் கொள்கையுடன் உங்களின் (ராகுல்) ஒட்டுமொத்த குடும்பமும் ஒருபோதும் போட்டிபோட முடி யாது. தியாகம் மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கொள்கை” என்றார்.
கடந்த புதன்கிழமை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி பேசுகையில், “இது தனிப்பட்ட நபரை பற்றியதல்ல. மோடி பின்பற்றும் சித்தாந்தம் குறிப்பிட்ட பிரிவினருக்கான சித்தாந்தம்.
இந்த சித்தாந்தம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தக் கூடியது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த சித்தாந்தத்தை தோற்கடிக்க காங்கிரஸ் தொண் டர்கள் ஒவ்வொருவரும் இதற்கு எதிராக போரிட வேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவருமான அஜித் சிங்கை விமர்சித்து மோடி பேசுகையில், “விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராகப் போரிட்டவர் சௌத்ரி சரண் சிங். இன்று அவரது மகன் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனது தந்தையின் பாதையை புறக்கணித்துவிட்டார். பெற்றோரின் கனவை நிறைவேற்றுவதே பிள்ளையின் கடமை. தந்தையின் பாதையை மகன் புறக்கணித்தால், அந்த மகனை சமூகம் புறக் கணிக்கும்.
காங்கிரஸ் கட்சியால் தனது தந்தை பல்வேறு தொல்லை களுக்கு ஆளானதை மறந்து, அதிகாரத்துக்காக அக்கட்சியுடன் கை கோர்ப்பவரை நீங்கள் நம்பு கிறீர்களா?” என்றார்.
மோடி மேலும் பேசுகையில், “பரம்பரை அரசியலுக்கு உத்தரப் பிரதேச மக்கள் முடிவு கட்டினால் தான் இந்த மாநிலம் பயனடையும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளை தோற்கடிப் பதே இப்போதைய முழக்கமாக இருக்க வேண்டும்” என்றார்.