உ.பி., பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

உ.பி., பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
Updated on
2 min read

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. இதையொட்டி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவ படையினர் குவிக் கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 20,000 வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். மொத்தம் 403 சட்டப் பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 70 தொகுதிகளை கொண்ட உத்தரா கண்டில் 15 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 54 வாக்கு எண்ணும் மையங்கள், 27 இடங்களில் அமைக்கப்பட் டுள்ளன. சிறிய மாநிலமான கோவாவில் (40 தொகுதிகள்) வடக்கு மற்றும் தெற்கு கோவா என இரண்டு மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மணிப்பூரில் 60 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைகளிலும் கூடுதலாக பொது மற்றும் துணை மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் துணை ராணுவப் படையினர் மட்டுமே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு வளையத் துக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் நபர்கள் அதற்கான முதல் நுழைவுப் பகுதியில் முழு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படவுள்ளனர்.

நுழைவுவாசலில் கூட்டத்தை கட்டுப் படுத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 100 மீட்டர் தொலை வுக்கு பாதசாரிகளோ, வாகனங்களோ வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லும்போது எவ்வித தில்லுமுல்லும் நடக்கக் கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த சீர்த்திருத்தங்கள் மற்றும் மத்திய அரசின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதா என்பதற்கான தீர்ப்பாகவே இந்த தேர்தல் முடிவு கருதப்படுகிறது, எனவே, பாஜகவினர் உள்பட எல்லா கட்சிகளும், பொது மக்களும் இந்த தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

மாலைக்குள் முடிவு தெரியும்

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதும், ஒவ்வொரு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் முன்னணி விவரங்கள் உடனுக்குடன் தெரியவரும். மாலை 5 மணிக்குள் முழு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in