

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், கடற் படையின் முக்கிய நீர்மூழ்கி கப்பல்களான ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் காந்தேரி மற்றும் ஐஎன்எஸ் சென்னை ஆகிய வற்றின் கம்பீர அணிவகுப் புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பெருங்கடல் பரப்பில் நீண்ட நேரம் பயணித்து கண்காணிப்பு நடவடிக்கையில் தனித்திறனும் முத்திரையும் பதிக்கும் கடற்படையின் பி-81 கடல்சார் ரோந்து விமானமும் இந்த கம்பீர அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.
இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பல்கள் பிரிவு இந்தாண்டு பொன் விழா கொண்டாடுகிறது. 2017-ஐ நீர்மூழ்கி ஆண்டு என கடற்படைத் தளபதி சுனில் லன்பாவும் அறிவித்துள்ளார்.
ஐஎன்எஸ் கல்வாரி வரும் மார்ச் மாதத்திலும், அதனைத் தொடர்ந்து ஐஎன்எஸ் காந்தேரி இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.