மத்திய அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மீது விமர்சனம்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ்

மத்திய அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மீது விமர்சனம்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ்
Updated on
1 min read

மத்திய அரசு மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு தங்களது 35-வது ஆண்டு சேவையைக் கொண்டாடும் விதமாக, டெல்லி யமுனா நதிப்படுகையில் சர்வதேச கலாச்சார விழாவை, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 13-ம் தேதி வரை நடத்தியது. விழாவுக்கு பிறகு நதிப்படுகை சேதமடைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சேதமடைந்துள்ள யமுனை நதிப்படுகையை அதன் சுற்றுச்சூழல் தன்மை மாசுபடாமல் மறுசீரமைக்க ரூ.42.02 கோடி செலவாகும் எனத் தெரிவித்தது.

நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சமூக வலைதளம் மற்றும் வாழும் கலை அமைப்பின் இணையதளத் தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “யமுனா நதி சேதமடைந்த தற்கு ஏதாவது நஷ்டஈடு விதித்தால் அதனை மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கும்தான் விதிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் விழா நடத்த அனுமதி வழங்கியவர்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த தீர்ப்பாயம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பொறுப்பி்ல்லாமல் பேசுவதாகக் கூறியது. இந்த நிலையில், தீர்ப் பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வாதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, தனது அறிக்கைக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 9-ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்குள் விளக்கம் அளிக்க அவரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in