

ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதற்கு முன்வந்தது காங்கிரஸ். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜே.பி.அகர்வால் கடிதம் அனுப்பினார்.ஆனால், காங்கிரஸ் ஆதரவு கர்த்தை புறக்கணித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே விளக்கமளித்துள்ள அவர், ஊழல் கறையற்ற அரசை அமைப்போம் என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்துள்ளது. இந்த உறுதியின் அடிப்படையிலேயே ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.
மேலும், ஊழல் அற்ற அரசு அமைப்பது குறித்து எந்த கட்சி வாக்குறுதி அளித்திருந்தாலும் காங்கிரஸ் இதே நிலைப்பாட்டையே எடுத்திருக்கும் என்றார்.