

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கவி நகர் பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் பேசத் தொடங்கினார். அப்போது, மேடை முன்பு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர், அகிலேஷை நோக்கி தனது காலணியை வீசி எறிந்தார். மேலும் தனது நிலத்தை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டதாகக் கூறி போராட்டத்திலும் ஈடுபட்டார்.
எனினும், அந்தக் காலணி செய்தியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்தது. இதைக் கண்ட போலீஸார் காலணி வீசிய இளைஞரை உடனடியாக கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.