

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 படுக்கை அறை கொண்ட வீடு, தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
சொகுசு பங்களா, சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய கார், உச்சகட்ட பாதுகாப்பு இவை எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முதல்வராகும் முன்னரே அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அவருக்கு ஒதுக்கப்பட்ட 5 படுக்கை அறைகள் கொண்ட வீட்டை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்திருந்த நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட 5 படுக்கை அறை கொண்ட வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்துள்ள கேஜ்ரிவால்: "டெல்லி அரசு எனக்கு ஒதுக்கிய வீடு என் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான் மக்கள் சேவைக்காகவே இருக்கிறேன், அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் எனக்கு ஒதுக்கப்பட்ட 5 படுக்கை அறை கொண்ட வீடுகளை ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளேன்.சிறிய வீட்டை தேர்வு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.