பஞ்சாபை சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு கேஜ்ரிவால் உதவுகிறார்: தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பஞ்சாபை சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு கேஜ்ரிவால் உதவுகிறார்: தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு கேஜ்ரிவால் உதவுகிறார். தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கிய இருண்ட காலத்தை நோக்கி பஞ்சாபை தள்ளுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய கடைசி நாளான நேற்று சங்ரூர் மாவட்டம், பல்லியன் என்ற கிராமத்தில் ராகுல் காந்தி பேசினார். பஞ்சாபின் மவூர் மண்டி என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கார் குண்டு வெடித்தில் 6 பேர் உயிரிழந்தனர். மவூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் அங்கு குண்டு வெடித்தது.

இந்தப் பின்னணியில் ராகுல் காந்தி பேசும்போது, “நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பது மிக முக்கியமானது. சூழல் கெட்டுப்போனால் வன்முறை தொடங்கும் அல்லது ஆத்திரம் நிலவும். பிறகு விவசாயிகள், தொழி லாளர்கள், நலிந்த பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். இதனால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும். ஒரு தீவிரவாத சிந்தனையிலிருந்து மற்றொரு தீவிரவாத சிந்தனைக்கு பஞ்சாப் செல்லக் கூடாது. அனைத்து தரப்பு மக்களையும் காங்கிரஸ் அரவணைத்துச் செல்கி றது. பஞ்சாப் விரைவான வளர்ச்சி பெறவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் வன்முறை ஏற்பட்டால், ஆத்திரம் நிலவினால் அனைத்துமே கெட்டுவிடும். பஞ்சாபை ஏற்கெனவே அழித்த இத்தகைய சக்திகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய சக்திகள் மீண்டும் தலைதூக்குகின்றன.

மவூர் குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்துள்ளனர். இத்தகைய சக்திகளுக்கு அர்விந்த் கேஜ்ரிவால் உதவுகிறார். இத்தகைய சக்திகள் தலைதூக்க அவர் உதவுகிறார். இது பஞ்சாபுக்கு மிகவும் ஆபத் தானது. இத்தகைய சக்திகள் தலை தூக்கினால் அனைத்து திட்டங் களும் பாழாகும். பஞ்சாப் வேறு திசை நோக்கி திரும்பிவிடும். எனவே சாதி, மதப் பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் குருநானக் தேவ், குரு கோவிந்த் சிங் காட்டிய பாதையில் பஞ்சாபை கட்டமைக்க முடியும்” என்றார்.

இங்கு கிராம மக்களுடன் கலந்துரையாடிய ராகுல், பின்னர் அவர்களுடன் பாயில் அமர்ந்து சாப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in