உ.பி.யில் பாஜக பிரச்சாரத்துக்கு 200 மினி வேன்கள் தயார்

உ.பி.யில் பாஜக பிரச்சாரத்துக்கு  200 மினி வேன்கள் தயார்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பிரச்சாரம் செய்ய அதன் உ.பி. தலைமை 200 மினி வேன்களை களம் இறக்கியுள்ளது. ‘வருகிறார் மோடி’ என்ற பெயரில் இந்த வேன்கள் மாநிலம் முழுவதும் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து `தி இந்து’விடம் உ.பி. மாநில பாஜகவின் செய்தி தொடர்பாளரான விஜய் பஹதூர் பாதக் கூறுகையில், ‘எந்த ஒரு தனி வேட்பாளர்களுக்கும் என இல்லாமல் பாஜகவுக்காக இந்த ‘ஹைடெக்’ வாகனங்கள், மாநிலம் முழுவதும் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்யும். இதில், அனைத்துவகை நவீன வசதிகளும் உள்ளன.

இதன் செலவுகளை உ.பி. தலைமை ஏற்றுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

இந்தவகை வாகனங்களை முதன் முதலில் அதன் முதல்வர் நரேந்திர மோடி அம் மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார். தற்போது, உ.பி. மாநில பாஜக தலைவராக மோடியின் நெருங்கிய சகா மற்றும் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் அமித் ஷா இருப்பதால், அதேபோன்ற வாகனங்கள் இங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், பாஜகவின் பிரச்சாரப் படங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் பேச்சுக்களை ஒலி, ஒளி பரப்பும் வகையில் 5க்கு 4 அடி அளவுகளிலான டிஜிட்டல் டிவி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. உ.பி. மாநிலம் முழுவதும் மின்வெட்டு நிலவுவதால் அந்த வாகனங்களில், சக்தி வாய்ந்த பேட்டரிகளுடன் கூடிய `இன் வெர்ட்டர்கள்’ வசதிகளும் செய்யப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in