Last Updated : 24 Nov, 2014 07:51 AM

 

Published : 24 Nov 2014 07:51 AM
Last Updated : 24 Nov 2014 07:51 AM

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 67 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த கூட்டத் தொடரில் இன் சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 67 மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. திட்ட கமிஷன் கலைப்பு, கருப்புப் பண விவகாரம், குஜராத் கலவரம் தொடர்பான நானாவதி கமிஷன் அறிக்கை, எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

67 மசோதாக்கள் நிலுவை

பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 14 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் எதிர்க் கட்சிகளின் அமளியால் மக்கள வையில் 14 மணி நேரமும் மாநிலங் களவையில் 34 மணி நேரமும் வீணானது.

எனினும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, செபி மசோதா உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. தற்போதைய நிலை யில் நாடாளுமன்றத்தில் 67 மசோ தாக்கள் நிலுவையில் உள்ளன. இவைதவிர புதிய மசோதாக் களை தாக்கல் செய்யவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா, சரக்கு-சேவை வரி மசோதா, நிலக்கரி சுரங்க அவசரச் சட்டம், மோட்டார் வாக னச் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது. நிலம் கையகப் படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், ரயில்வே சட்டங்க ளில் மத்திய அரசு முக்கிய திருத் தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாக்க ளுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடர் மோடி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிர அரசியலில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்நிலையில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராத் நிருபர் களிடம் கூறியபோது, குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தார்.

திரிணமூல் புறக்கணிப்பு

குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் கூறிய போது, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என பாஜக வாக்குறுதி அளித்தது, அதனை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் பிரச்சினை எழுப்பு வோம். ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x