பாஜக எம்எல்ஏ பேரன் கடத்தல்: பிஹார் மாநிலத்தில் பரபரப்பு

பாஜக எம்எல்ஏ பேரன் கடத்தல்: பிஹார் மாநிலத்தில் பரபரப்பு
Updated on
1 min read

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் இருந்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் பேரனை இரண்டு அடையாளம் தெரியாத பெண்கள் கடத்திச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருப்பவர் தினேஷ் பிரசாத் சிங். இவரது மனைவி வீணா தேவி. இவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்களது மகன் அபிஷேக் எனும் ராஜ பாபு ஆவார். இவரது மனைவி குஷி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சம்பவ தினத்தில், குஷி தன் குழந்தையுடன் படுக்கையில் இருந்தார்.

அப்போது இரண்டு பெண்கள் அந்தக் குழந்தையைக் காண வந்தனர். அவர்கள் இருவரும் குழந்தையின் அழகைப் பாராட்டியதோடு அதற்கு விளையாட்டையும் காட்டிக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல குஷி உறங்கிப் போனார். அந்த சமயம் பார்த்து குழந்தையை அவர்கள் இருவரும் தூக்கிச் சென்றனர்.

தூக்கத்தில் இருந்து விழித்த குஷி அலற, விஷயம் தெரிய வந்தது. உடனே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீ ஸார் மருத்துவமனையில் இருந்த ரகசிய கேமராக்களைச் சோதித்த னர். பின்னர், அந்த மருத்துவமனையின் நுழைவாயிலில் பணியில் இருந்த‌ காவலாளிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அந்தப் பெண்களின் புகைப்படங்களை அந்த மாவட் டம் முழுக்க உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி தேடுதல் மேற்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in