

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் டிபன்ஸ் சாலை அருகே கேட்பாரற்றுக் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் கடந்த ஜனவரி 1,2 தேதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உயர் பாதுகாப்புப் பகுதியான பதான்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியத் தரப்பில் 7 வீரர்கள் பலியாகினர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை டிபன்ஸ் சாலை பகுதியில் ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்தது. அதில் ஒரு கோதுமை மாவு பொட்டலம், 5 உடைகள், ராணுவ உடுப்பு ஆகியன இருந்தன.
உள்ளூர்வாசி ஒருவர் அளித்தத் தகவலின் அடிப்படையில் பதான்கோட் நகர் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மம்மூன் கன்டோன்மென்ட் பகுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை