Published : 14 Jan 2017 10:29 AM
Last Updated : 14 Jan 2017 10:29 AM

மாவோயிஸ்ட்கள் மீண்டும் துணிகரம்: ஆந்திரா - ஒடிசா எல்லையில் 6 அரசு அதிகாரிகள் கடத்தல்

ஆந்திரா - ஒடிசா மாநில எல் லையில் 6 அரசு ஊழியர்களை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருக்கும் போடங்கா பகுதிக்கு வருவாய் துறை அதிகாரிகள் 6 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை நேற்று காலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாவோயிஸ்ட் களிடம் இருந்து அரசு அதி காரிகளைப் பத்திரமாக மீட்பதற் கான நடவடிக்கைகளில் போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரா - ஒடிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு 31 மாவோயிஸ்ட்களை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். அதற்கு பழிதீர்க்கும் வகையில் அரசு அதிகாரிகளை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆந்திராவின் விசாகப் பட்டினம், காகுளம், விஜய நகரம் உள்ளிட்ட மாவோ யிஸ்ட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x