Last Updated : 28 Sep, 2016 09:32 AM

 

Published : 28 Sep 2016 09:32 AM
Last Updated : 28 Sep 2016 09:32 AM

உரி தாக்குதலில் எல்லை தாண்டிய தீவிரவாதிகளுக்கு தொடர்பு: பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆதாரங்களை வழங்கியது இந்தியா

எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகளே உரி தாக்குதல் சம்பவத்தை நடத்தியதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தை நேரில் அழைத்து இந்தியா நேற்று வழங்கியது. மேலும் இது போன்ற சதிச் செயல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ தலைமையகத்துக் குள் நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில், 18 வீரர்கள் உயிரிழந் தனார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ் தானுக்கு உரிய பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தீவிர வாத நாடாக அறிவித்து, தனிமைப் படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதே சமயம் இந்த தாக்குதலில் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகளே உரி தாக்குதல் சம்பவத்தை நடத்தியதற்கான ஆதாரங்களை நேற்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தை அழைத்து இந்திய வெளி யுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் வழங்கினார். அப்போது காஷ்மீருக் குள் தீவிரவாதிகள் எளிதாக ஊடுருவ உதவிபுரிந்த இரு வழிகாட்டிகளையும் உள்ளூர் கிராம மக்கள் பிடித்து வைத்து அரசிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியா வுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து ஏவி விடப்படும் தீவிரவாத தாக்குதல்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிடிபட்ட இரு வழிகாட்டிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் முசாபராபாத்தை சேர்ந்த பைசல் ஹுஸேன் அவான் (20) மற்றும் யாஸின் குர்ஷித் (19) என்பது தெரியவந்திருப்பதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின்போது ராணுவம் சுட்டதில் உயிரிழந்த 4 தீவிரவாதி களில் ஒருவரது பெயர் ஹபீஸ் அகமது என்றும் இவரும் முசா பராபாத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனை வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது ட்விட்டர் செய்தியில் உறுதிபடுத்தியுள்ளார்.

இதே போல் கடந்த 23-ம் தேதி பாகிஸ்தானின் சியால்கோட்டைச் சேர்ந்த அப்துல் கயூம் என்பவரும் கைது செய்யப்பட்டதாகவும், விசா ரணையில் பாகிஸ்தானில் செயல் படும் லஷ்கர் இ தொய்பா தீவிர வாத அமைப்பின் 3 வார தீவிரவாத பயிற்சியில் பங்கேற்க சென்றதாகவும் அவர் தெரிவித்துள் ளார். இந்த தகவலும் பாகிஸ்தான் தூதரிடம் நேற்று தெரிவிக்கப் பட்டது. மேலும் கொல்லப்பட்ட தீவிர வாதிகளிடம் இருந்து கைப்பற்றப் பட்ட கையெறி குண்டுகள், உடை கள், மருந்து பொருட்கள், ஜிபிஎஸ் உபகரணங்கள் அனைத்திலும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முத்திரை குத்தப்பட்டிருந்த ஆதாரங்களும் வழங்கப்பட்டன.

பாகிஸ்தானின் சதிச் செயல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x