அமைச்சர் நெருக்கடி அளிப்பதாகக் கூறி கர்நாடகாவில் மேலும் ஒரு டிஎஸ்பி தற்கொலை: சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

அமைச்சர் நெருக்கடி அளிப்பதாகக் கூறி கர்நாடகாவில் மேலும் ஒரு டிஎஸ்பி தற்கொலை: சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், மங்களூரூ துணை காவல் கண்காணிப்பாள ரான எம்.கே.கணபதி(56) நேற்று முன்தினம் மடிகேரியிலுள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பரபரப்பான பேட்டி அளித்தார்.

அதில், “கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு மங்களூரு கலவரத் தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னேன். ஆனால் முன்னாள் உள் துறை அமைச்சரும், தற்போதைய பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.ஜே.ஜார்ஜ் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடு விக்குமாறு அழுத்தம் கொடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் உளவுத் துறை மூத்த அதிகாரி ஏ.எம்.பிரசாத், மற்றும் லோக் ஆயுக்தா ஐஜிபி பிரணாப் மொஹன்டி ஆகியோர் என்னை கண்டித்தனர். கடந்த சில மாதங்களாக அமைச்சரும், காவல்துறை மூத்த அதிகாரிகளும் என்னை அடிக்கடி மிரட்டினர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அமைச்சர் ஜார்ஜ், ஏ.எம்.பிரசாத், பிரணாப் மொஹன்டி ஆகியோரே காரணம்” என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, மடிகெரி யில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய கணபதி, நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதம் கைப் பற்றப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, கணபதியின் உடல் அவரது ஊரில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக கணபதியின் தற் கொலை குறித்து சிபிஐ விசாரிக்க கோரி குடகு மற்றும் பெங்களூரு வில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஜதவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, “சில வாரங்களுக்கு முன்பு பெண் டிஎஸ்பி அனுபமா ஷெனாய்க்கு அமைச்சர் பரமேஷ்வர் நாயக் தொந்தரவு கொடுத்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கள்ளப்பா தற்கொலை செய்து கொண்டார். கணபதி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மரணத்துக்கான காரணத்தை தொலைக்காட்சி நேர்காணலில் கூறி இருப்பதால் அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in