தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 6 பேர் படுகாயம்

தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 6 பேர் படுகாயம்

Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர்.

sriநகர் அருகே உள்ள பாந்தா சவுக் பகுதியில் உள்ள நெடுஞ் சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மறைந் திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 6 வீரர்கள் காயமடைந்தனர்.

sriநகரின் நொவட்டா பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in