

இந்தியாவில் 32 வகையான வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டு வருவதாக சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க மனிதர்கள் மற்றும் வனவிலங்கு எதிர்கொள்ளல் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உட்பட இந்தியா முழு வதும் 11 வனவிலங்குகள் சரணாலயம் அருகே அமைந்திருக் கும் 2,855 கிராமங்களில், 5,196 குடும்பங்களிடம் கடந்த 2011 முதல் 2014 வரை அமெரிக்காவைச் சேர்ந்த வன உயிரின பாதுகாப்பு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுவதால் 71 சதவீத குடும்பத்தினர் விளை விக்கும் பயிர்கள் நாசமடைவதும், 17 சதவீத குடும்பங்களின் கால்நடைகள் இரையாவதும், 3 சதவீத குடும்பத்தில் மனித உயிர்கள் பறிபோவதும் தெரிய வந்தது. இதை வைத்து உயிர் மற்றும் பொருட்சேதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள், தற்போது அமலில் உள்ள இழப்பீடு திட்டங்கள், உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே வெளிப்படையாக நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள் ஆகியவை குறித்து அடையாளம் கண்டனர்.
குறிப்பாக கிராமவாசிகள் தங்களது பயிர்களையும், கால்நடை களையும் காப்பாற்ற 12 விதமான வழிகளைப் பயன்படுத்துகின்றனர். இரவு நேர கண்காணிப்பு, பயமுறுத் தும் கருவிகள், வேலிகள் ஆகியவை பொதுவான வழிமுறைகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அண்மை ஆண்டுக ளாக இந்த மாநிலங்களில் தான் வனவிலங்குகளால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளன. தவிர இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குத் தான் அதிக அளவிலான இழப்பீடுகளையும் அரசு வழங்கி இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுவதால் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.12,559 மதிப்புள்ள பயிர்கள் சேதமடைவதாகவும், ரூ.2,883 மதிப்புள்ள கால்நடைகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உயிர் மற்றும் பொருட் சேதத்தை தவிர்க்க வனவிலங்கு எதிர்கொள்ளல் மேலாண்மையை இந்திய அரசு வலுப்படுத்துவது அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.