விப்ரோ நிறுவனத்துக்கு 2-வது முறை மிரட்டல் மெயில்

விப்ரோ நிறுவனத்துக்கு 2-வது முறை மிரட்டல் மெயில்
Updated on
1 min read

ரூ.500 கோடி பிட்காயின் கேட்டு பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் 72 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் அசம்பாவிதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் மிரட்டல் வந்த ஒரு மாதத்துக்குள்ளாக, மீண்டும் இந்த மெயில் வந்துள்ளது. Ramesh2@protonmail.com என்ற மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.பி. முகவரியில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது போலியான முகவரியாகவும் இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நச்சு மிரட்டல்

முன்னதாக மே 5-ம் தேதியும் அதே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. அப்போதும் ''ரூ.500 கோடி பிட்காயின்களை அனுப்பவேண்டும். தவறினால் இயற்கை நச்சு மற்றும் ரிசின் நச்சுகளை உணவகங்கள், குடிநீர்க் குழாய்கள் வாயிலாகக் கலந்துவிடுவோம்'' என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in