Published : 07 Aug 2016 07:37 AM
Last Updated : 07 Aug 2016 07:37 AM

ஜெய்ப்பூர் அருகே அரசு கோசாலையில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்: பட்டினியால் 500 பசுக்கள் பரிதாப பலி - ராஜஸ்தானில் பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு

ஜெய்ப்பூர் அருகே கோசாலை ஒன்றில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டதால், தீவனம் கிடைக்காமல் கடந்த 2 வாரங்களில் 500-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, அரசு சார்பில் ஹிங்கோனியா பசுக்கள் காப்பகம் (கோசாலை) இயங்கி வரு கிறது. அதில், ஒப்பந்தப் பணியா ளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வில்லை எனக் கூறி கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 8,000 பசுக்கள் உள்ள இந்த கோசாலையில் பணியாளர்கள் பணிக்கு வராததால், தீவனம் வழங்குவது, சாணம் அள்ளுவது மற்றும் பராமரிப்பு வேலைகள் நடக்கவில்லை. இதன் விளைவாக வாரக் கணக்கில் தீவனம் உட்கொள் ளாமலும், சேறு சகதியில் சிக்கியும் ஏராளமான பசுக்கள் இறந்ததாக தகவல் பரவியது.

தன்னார்வலர் குழுவினர் கோசாலையின் உள்ளே நுழைந்து பார்த்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும், 90 மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். இறந்த மாடு களின் எண்ணிக்கை குறித்து அதி காரப்பூர்வமாக தகவல் தெரிவிக் கப்படவில்லை என்றாலும், 500-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாக தன்னார் வலர்கள் தெரிவித்தனர்.

‘பசுக்கள் யாவும் நோய்வாய்ப் பட்டு இறக்கவில்லை. பட்டினியால் மட்டுமே இறந்தன’ என்று அரசு கால்நடை மருத்துவர் தேவேந்திர குமார் யாதவ் குறிப்பிட்டார்.

‘பிரச்சினைக்கு முக்கிய காரணமே, கடந்த மே மாதத்தில் இருந்து பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததுதான். பணியாளர்கள் இல்லாமல் எதுவும் செய்யமுடியவில்லை’ என காப்பகத்தின் தலைவர் பகவத் சிங் தேவால் கூறினார்.

சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் இயங்கும் காப்பகத்தில், பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவனத்துக் கும், ஜெய்ப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினை காரணமாகவே பணி யாளர்களுக்கு சம்பளம் வழங் காமல் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது.

‘அரசியல் செய்வதற்கு மட்டும் பசுக்களை பாஜக பயன்படுத்து கிறது. நிஜத்தில் அக்கட்சி ஆளும் மாநிலத்திலேயே பசுக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது’ என சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ்வர் தூடி கூறினார்.

‘பசு பாதுகாப்பகமாக இருக்க வேண்டிய இடம், பசுக்களின் பலிக் கூடமாக மாறியதற்கு மாநில அரசின் பொறுப்பற்ற தனமே காரணம்’ என விஸ்வ இந்து பரிஷத் மூத்த நிர்வாகி நர்பாத் சிங் ஷெகாவத் கூறினார்.

இந்த சூழலில், கோசாலையில் பாதிக்கப்பட்ட பசுக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது மாநில அரசு. மாநில அமைச்சர் ராஜ்பால் சிங் ஷெகாவத், ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று கோசாலைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். நிலவரம் குறித்து முதல்வரிடம் விளக்கினார்.

மாநில கால்நடைத் துறை அமைச்சர் பிரபுலால் சைனியும் கோசாலையை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x