செம்மரம் கடத்தியதாக 9 தமிழர்கள் கைது

செம்மரம் கடத்தியதாக 9 தமிழர்கள் கைது

Published on

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை அதிரடி போலீ ஸார் நேற்று கைது செய்தனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரங் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக, ஆந்திர போலீ ஸார் மற்றும் வனத்துறை அதிகாரி கள் கர்நாடகா மற்றும் தமிழக மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறனர். ஆனாலும் திருப்பதி யை அடுத்த கரகம்பாடி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று காலையில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 9 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 27 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அதிரடிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in