இந்திய நிலைகள் மீது தாக்குதல்: வீடியோ வெளியிட்டது பாகிஸ்தான்

இந்திய நிலைகள் மீது தாக்குதல்: வீடியோ வெளியிட்டது பாகிஸ்தான்
Updated on
1 min read

எல்லையில், இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் வீடியோவை பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. 5 இந்திய ராணுவ வீரர்களை வீழ்த்தியதாகவும் தட்டா பானி பகுதியில் இருந்த இந்திய பதுங்குகுழிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே இந்திய நிலைகள் மீது சிறு குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அவரின் மற்றொரு பதிவில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மறுப்பு:

இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற பாகிஸ்தானின் கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நம்பத் தகுந்த வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தான் வீரர் வாரிஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்த தகவல்களை பாகிஸ்தான் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பாகிஸ்தான் நிலைகளைக் குறிவைத்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வெளியிட்ட தாக்குதல் வீடியோவைக் காண

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in