

உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு 4-ம் கட்டமாக 53 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக் கப்பட்டது. இதன்படி, 3 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்து விட்டது. இந்நிலையில், ஜலாவுன், அலகாபாத், ஜான்சி, பதேபூர் உட்பட 12 கிழக்கு மாவட்டங் களுக்குட்பட்ட 53 தொகுதிகளில் நேற்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் இதில் 61 சதவீத வாக்குகள் பதிவான தாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறட்சிப் பகுதியான புந்தேல்கண்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகள் தேர்தல் நடந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
நேற்று நடந்த தேர்தலில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர். இதில் அனைத்து தொகுதி யிலும் பகுஜன் சமாஜ் போட்டி யிடுகிறது. 48 தொகுதியில் போட்டியிடும் பாஜக, தனது கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு மீதம் உள்ள 5 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. சமாஜ்வாதி 30 தொகுதிகளிவும் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அடுத்தபடியாக வரும் 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.