

பிஹார் மாநிலம், முஸாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டது. முஸாஃபர்பூர் அருகே உள்ள பொக்ரெய்ரா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
மனுவில், ‘கடந்த, 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று, சண்டிகரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை துண்டைப்போல தரையில் விரித்து அதன் மீது அமர்ந்திருந்தார்.
முகத்தையும், கைகளையும் துடைப்பதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தினார். இதன் மூலம் அவர் தேசியக்கொடியை அவமதித் துள்ளார். மோடியின் இச்செயல், நாட்டு மக்களின் உணர்வுகளை புண் படுத்தும் வகையில் இருந்தது’ என, பிரகாஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் இருந்து பதி விறக்கம் செய்யப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக் களை ஆதாரமாக, நீதிமன்றத்தில் பிரகாஷ் சமர்ப்பித்துள்ளார். ஜூலை 16-ம் தேதி இம்மனு விசாரணைக்கு வருகிறது.
ஏற்கெனவே பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே சர்ச்சை யில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.