5 மாநில தேர்தலும் மக்கள் தீர்ப்பும்: கோவாவில் தொங்கு சட்டப்பேரவை

5 மாநில தேர்தலும் மக்கள் தீர்ப்பும்: கோவாவில் தொங்கு சட்டப்பேரவை
Updated on
2 min read

கோவாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தினால் தொங்கு சட்டப்பேரவை அமையவுள்ளது.

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் பாஜக 13 இடங்களிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மாநில கட்சிகளான கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத காரணத்தினால் அம்மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை. ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து பிரிந்து கோவா சுரக்�ஷா மஞ்ச் என்ற கட்சியை தொடங்கிய சுபாஷ் வெலிங்கர் மற்றும் சிவசேனாவும் இந்த தேர்தலில் கணக்கை தொடங்கவில்லை.

எத்தனை சதவீதம்

நேற்றிரவு நிலவரப்படி கோவா தேர்தலில் பாஜகவுக்கு 32.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து காங்கிரஸ் 28.4 சதவீதமும், மகாராஷ்டிர வாதி கோமந்தக் கட்சி 11.3 சதவீதமும், ஆம் ஆத்மி 6.3 சதவீத வாக்குகளும் பெற் றுள்ளன.

முதல்வர் பர்சேகர் தோல்வி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்டேவிடம் தோல்வியடைந்தார்.

பனாஜி வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றத்துடன் காத்திருந்த முதல்வர் பர்சேகர் முடிவு தெரிந்த பின், நிருபர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். வெற்றிப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்டே தனது வெற்றியை கட்சித் தொண்டர்களுக்கு அர்ப்பணித்தார். முதல்வரின் பணியால் மக்கள் அதிருப்தி அடைந்து இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் சோப்டே தெரிவித்தார். சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பர்சேகர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதல்வர் பர்சேகர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.

நோட்டாவில் கோவா முதலிடம்

கோவா சட்டப்பேரவைத் தேர்த லில் 1.2 சதவீத வாக்காளர்கள் நோட்டாவுக்கே வாக்களித்துள்ள னர். உத்தராகண்டில் நோட்டா வுக்கு 1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தெரிவிக்க 'நோட்டா' பொத் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஜக அமோக வெற்றிப் பெற்ற உத்தரப் பிரதேசத்தில் 0.9 சதவீதம் பேர் நோட்டா பொத்தானை அழுத்தியுள்ளனர். பஞ்சாப்பில் இதன் சதவீதம் 0.7. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 0.5 சதவீதத்தினர் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உ.பி.யில் மொத்தம் 4,800 பேர் போட்டியிட்டனர். கோவாவில் 250 வேட்பாளர்களும், உத்தரா கண்டில் 600 வேட்பாளர்களும், பஞ்சாபில் 1,100 வேட்பாளர்களும், மணிப்பூரில் 100 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.

மக்கள் தீர்ப்பு: கேஜ்ரிவால் ஏற்பு

பஞ்சாப் மற்றும் கோவா சட்டப் பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளதை அடுத்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல் வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘மக்கள் தீர்ப்பை நாங்கள் அப்படியே ஏற்றுக் கொள்கி றோம். தேர்தலில் கட்சித் தொண்டர் கள் கடுமையாக பாடுபட்டனர். எங்களது போராட்டம் நின்றுவிடாது. தொடர்ந்து நீடிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லிக்கு வெளியே முதல் முறையாக பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. இதில் பஞ்சாபில் மட்டும் வெற்றி பெறுவதற்காக 95-க்கும் மேற்பட்ட தேர்தல் பொதுக்கூட்டங்களில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in