Last Updated : 07 Jun, 2016 02:21 PM

 

Published : 07 Jun 2016 02:21 PM
Last Updated : 07 Jun 2016 02:21 PM

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீது வாதங்கள் நிறைவு: ஜெ. வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு இறுதிவாதங்களும் நிறை வடைந்தன. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து குவித்ததாக கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகள் இவ்வழக்கை விசாரித்த பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் 2014-ம் ஆண்டு நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நால் வரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நா டக அரசு, திமுக பொதுச்செயலா ளர் அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்ச‌ நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திர‌கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோரடங்கிய அமர்வு விசா ரித்து வருகிறது.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 1-ம் தேதி நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ''1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்களை நடத்தியுள்ளார். இந்த நிறு வனங்களின் பேரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ், சிக்னோரா என்டர் பி ரைசஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய 6 நிறுவனங்களில் ஜெய லலிதா நிர்வாக இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளார். அதன் பிறகு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவ‌ரும் இந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளனர். நால்வரின் வங்கிக் கணக்கில் இருந்து இந்த 6 தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த நிறுவனங்கள் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்ட பிறகு ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள் ளது. 6 தனியார் நிறுவனங்களை விடுவித்ததற்கான காரணத்தை விளக்கவில்லை. இந்த 6 தனியார் நிறுவனங்களையும் சொத்துக் கு விப்பு வழக்கில் இருந்து விடுவிக் கக் கூடாது''என்றார்.

இதையடுத்து, 6 தனியார் நிறு வனங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரின் என் ராவல், '' இந்த தனியார் நிறுவனங் களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஜெ யலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து இந்த நிறுவனங் களுக்கு பணப் பரிமாற்றம் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. இந்த நிறுவனங் களுக்கு தனிப் பட்ட வருமானம் இருந்ததாலே, சொத்துகள் வாங்கப்பட்டன. இதனை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் அடிப்ப டையிலே இவ்வழக் கில் இருந்து 6 தனியார் நிறுவனங்களின் சொத் துகளும் விடுவிக்கப்பட்டன''என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், ''இவ்வழக்கில் அனைத்து தரப்பு இறுதிவாதங்களும் நிறை வடைந்துள்ளன. இவ்வழக்கு தொடர்பான எழுத்துபூர்வ வாதங் களை அனைத்து தரப்பினரும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு எப்போது?

உச்ச நீதிமன்றத்தை பொறுத் தவரை வழக்கின் விசாரணை முடிந்த பிறகு தீர்ப்பு தேதி அறி விக்கப்படுவதில்லை. தீர்ப்பு வழங் குவதற்கு எவ்வித காலக்கெடு வும் இல்லை. தீர்ப்பு நாளுக்கு முந்தைய நாள் வழக்கமான பட்டி யல் வெளியிடும்போது தீர்ப்பு தேதி வெளியாகும். தீர்ப்பு நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.

வரும் 29-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை. எனவே தீர்ப்பு வெளி யாக சற்று தாமதம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x