Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

கேரளத்தில் இளவரசர் சார்லஸ்

பிரிட்டன் இளவரசர் சார்லஸும் அவரது மனைவி கமீலா பார்க்கரும் தங்களது 4 நாள் கேரள சுற்றுப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

முதல்நாளில் கொச்சி அருங்காட்சியகத்துக்கு சென்ற அவர்கள், கேரள கலை பொக்கிஷங்களை கண்டு வியந்தனர். அங்கு நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் அவர்கள் ரசித்தனர்.

அரச தம்பதியருக்காக நரகாசுர வதத்தை விளக்கும் சிறப்பு கதகளி நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு கலைஞர்கள் தலா 35 கிலோ எடை கொண்ட ஆபரணங்களை அணிந்து ஆடினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ், மிக அற்புதமான நடனம், இன்னும் கொஞ்ச நேரம் நடன நிகழ்ச்சியை நீட்டித்திருக்கலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து பாரீஸ் லஷ்மியின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸை சேர்ந்த அவர் பரதநாட்டியத்தின் மீதான ஆர்வத்தால் கேரளத்திலேயே மணம் முடித்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அவரது நடனத்தைப் பாராட்டி பிரெஞ்சு மொழியில் சார்லஸ் உரையாடினார்.

முன்னதாக அருங்காட்சியகத்தின் லிப்ட்டில் செல்ல மறுத்துவிட்ட சார்லஸ், அதன் மரப்படிக்கட்டுகளின் அழகை ரசித்தபடியே மாடிக்கு ஏறிச் சென்றார். அங்குள்ள ஓவியங்கள், இசைக் கருவிகள், பாரம்பரிய அணிகலன்கள், வெள்ளி, செம்பில் செய்யப்பட்ட சிலைகளை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பார்த்தார்.

தனது 4 நாள் பயணத்தில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட அவர் திட்டமிட்டுள்ளார்.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x