Last Updated : 28 Jun, 2017 09:49 AM

 

Published : 28 Jun 2017 09:49 AM
Last Updated : 28 Jun 2017 09:49 AM

உடுப்பி பெஜாவர் மடத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் இப்தார் விருந்து: விஎச்பி உட்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் - ஜூலை 2-ல் போராட்டம் நடத்த திட்டம்

கர்நாடகாவில் உடுப்பி பெஜாவர் மடத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்பட்ட தற்கு ஸ்ரீராம் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஆகிய இந்துத்துவ அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பழமையான பெஜாவர் மடத்தில் முதல்முறையாக கடந்த 24-ம் தேதி இஸ்லாமியர்களுக்கு சைவ இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி (86) தலைமையில் அஞ்சம் மசூதி மவுலானா இன்னாயித்துல்லா முன்னிலையில் மடத்துக்குள் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.

இரு பிரிவினரிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய அமைப் பின் தலைவர்கள் வரவேற்பு தெரி வித்தனர். சமூக வலைத் தளங்களி லும் பெஜாவர் மடாதிபதி விஸ் வேஸ்வ தீர்த்த சுவாமிக்கு வாழ்த்து களும், பாராட்டுகளும் குவிந்தது.

பிரமோத் முத்தாலிக்

இந்நிலையில் பெஜாவர் மடத்தின் நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வந்திருந்த ராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்தார் விருந்து நடத்திய பெஜாவர் மடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக பிரமோத் முத்தாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பழமையான பெஜாவர் மடத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்ததை ஏற்க முடியாது. பெஜாவர் மடாதிபதி மன்னிக்க முடியாத‌ வரலாற்று பிழையை செய்துவிட்டார். அவரை கண்டித்து வரும் ஜூலை 2-ம் தேதி ராம் சேனா சார்பாக கர்நாடகா முழுவதும் போராட்ட‌ம் நடத்தப்படும்.

நாட்டில் இந்து அமைப்பினர் பசுக்களை பாதுகாக்க போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இந்த மடமோ, பசுக்களை வெட்டி சாப்பிடு வோருக்கு இப்தார் விருந்து அளித் துள்ளது. இதன் மூலம் இந்து மக்களின் மனதை புண்படுத்தி விட்டார். பெஜாவர் மடாதிபதி இந்து மதத்திற்கு தவறான முன்னுதாரண மாக மாறிவிட்டார். இஸ்லாமியர் களை கோயிலுக்குள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்து மத தர்மத்தை மீறி விட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி விளக்கம்

விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி

பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி கூறியதாவது:

அன்பையும், நட்பையும் வளர்க்கும் வகையில் இப்தார் விருந்து நடத்தியது தவறு இல்லை. நான் இந்துக்களையோ, இந்து மதத்தையோ அவமானப்படுத்தவில்லை. இந்த நிகழ்வை குறுகிய உள்ளத்துடன் பார்ப்பது தேவையற்றது. இஸ்லாமியர்களுக்கு கோயிலின் உள்பகுதியில் இப்தார் விருந்தோ, தொழுகையோ நடத்தவில்லை. கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடத்தப்பட்ட‌து. இந்து மதத்திற்குள் இருப்பவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். எனவே மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து இஸ்லாமியரை ஒதுக்க முடியாது. காலங்காலமாக இந்து - இஸ்லாம் இடையே ஒற்றுமை இருந்து வருகிறது. அதனை கெடுக்க நினைப் போரை கடவுளும், மக்களும் பார்த்துக் கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x