

எகிப்தை சேர்ந்த உலகின் மிக பருமனான பெண், சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படவுள் ளது.
எகிப்தை சேர்ந்த இமான் அகமது (36) என்ற பெண் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். 500 கிலோவுக்கு அதிக மாக அவரது உடல் எடை அதிகரித் ததால், கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. இதனால் மனம் வேதனை அடைந்த இமான் மும்பையில் உள்ள உடல் எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் முபாஸல் லக்டாவா லாவை தொடர்பு கொண்டு தனக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் டாக்டர் லக்டாவாலா தனது மருத்துவக் குழுவை கடந்த டிசம்பரில் அங்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், இமானை மும்பைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க அனுமதிக்கும்படி லக்டாவாலா மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலித்த சுஷ்மா ஸ்வராஜ் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து எகிப்தில் இருந்து இமான் அகமது நேற்று விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் தொற்று ஆகிய நோய்களாலும் இமான் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.