

கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக், பெல்லாரி மாவட்டம் கூட்லகி டிஎஸ்பியாக பணியாற்றிய அனுபமா ஷெனாய் ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அனுபமா பெல்லாரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுபமா கடந்த 4-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பரமேஷ்வர் நாயக்குக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் அனுபமாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல், அதற்கான காரணத்தை விசாரிக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காவல் துறை உயர் அதிகாரி கள் அனுபமாவை தொடர்புக் கொள்ள முயன்றனர். ஆனால் அவர்தான் கர்நாடகாவை விட்டு வெளியேறி, மகாராஷ்டிர மாநிலத் தில் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேஸ்புக் கில் அமைச்சருக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரி வித்து வந்தார். இதன் உச்சக்கட் டமாக, “பரமேஷ்வருக்கு பல பெண் களுடன் தொடர்பு இருக்கிறது. அது தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிடப் போகிறேன்” என எச்சரித்தார்.
இந்நிலையில், நேற்று அதி காலை கூட்லகி நகருக்கு வந்த அனுபமா, பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசும்போது, “அமைச்சர் பரமேஷ்வர் நாயக் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் எனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறப் போவதில்லை. குறைந்தப்பட்சம் அமைச்சரை பெல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்தாவது நீக்க வேண்டும். அதுவரை எனது போராட்டம் ஓயாது” என்றார்.
அப்போது அமைச்சருக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் குறித்தும், பேஸ்புக் பதிவுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நான் பேஸ்புக்கில் அவருக்கு எதிராக எதையும் எழுதவில்லை. எனது பெயரில் வேறு யாரோ எழுதி இருக்கலாம். அது பற்றி எனக்கு தெரியாது” என மறுத்தார்.
இந்நிலையில் பரமேஷ்வர் நாயக் கூறும்போது, “டிஎஸ்பி அனுபமாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.