உத்தராகண்ட் முதல்வர் லஞ்சம் கொடுத்த ரகசிய சிடி அம்பலம்: காங்கிரஸ் அதிர்ச்சி

உத்தராகண்ட் முதல்வர் லஞ்சம் கொடுத்த ரகசிய சிடி அம்பலம்: காங்கிரஸ் அதிர்ச்சி
Updated on
1 min read

உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலை யில் பாஜகவில் இருந்து வெளி யேற அக்கட்சியின் முன் னாள் எம்எல்ஏவுக்கு, முதல்வர் ஹரிஷ் ராவத் லஞ்சம் வழங் கிய விவகாரத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தச் செய்தி ஒளிபரப்பப்படுவதை தடுத்து நிறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் பீம்தால் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் பண்டாரி. கடந்த ஆண்டு முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்கொடி உயர்த்திய 9 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கூண்டோடு பாஜகவில் இணைந்தனர். இதனால் அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சமயத்தில் பண்டாரி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது, பாஜகவை கடும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் இந்த விவ காரம் தொடர்பாக ரகசிய புல னாய்வில் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சி ஒன்று, பண்டாரியை பதவி விலக செய்வதற்காக முதல்வர் ஹரிஷ் ராவத் ரூ.7 கோடி வரை பேரம் பேசியதை கண்டுபிடித்தது. மேலும் இது தொடர்பாக கிடைத்த ரகசிய சிடியையும் ஒளிபரப்பியது.

உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலை யில் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக ஒளிபரப் பப்பட்ட இந்த சிடி அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால் பதற்றம் அடைந் துள்ள காங்கிரஸ் மேலிடம் தேர்தலில் கட்சிக்கும், முதல்வர் ஹரிஷ் ராவத் துக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜக இத்தகைய சதிச் செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் தனியார் தொலைக்காட்சியில் இந்தச் செய்தியை ஒளிபரப்பு வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in