Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

கர்நாடக‌த்தில் 10 மாதத்தில் 3,000 சிறுவர்கள் மாயம்

கர்நாடக‌த்தில் கடந்த 10 மாதங்க ளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறிப்பாக பதின்ம ப‌ருவ வயதுடையவர்கள் காணாமல் போய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் புதன்கிழமை சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெல்கா மில் உள்ள சுவர்ணசவுதாவில் கடந்த இரண்டு வாரங்களாக நடை பெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் சித்தராமய்யா பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் எச்.டி.குமார சாமி, ''கர்நாடகத்தில் நாளுக்கு நாள் ஏராளமான‌ சிறுவர்களும் சிறுமிகளும் மாயமாகி வருகி றார்கள். அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுத்து இருக்கி றீர்கள்? இதைத் தடுக்க அரசு எந்த‌ மாதிரியான திட்டங்களை வகுத்திருக்கிறது?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், ''கடந்த மே மாதம் முதல் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தி ருக்கிறது. சட்டம் ஒழுங்கை மீறுப வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் சிறுவர்கள் மாயமாகி வருவது மிகுந்த வருத்தம் அளிக்கி றது.

காவல்துறை அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோ பர் வரையிலான 10 மாதங்களில் 3 ஆயிரத்து 107 சிறுவர்கள் மாய மாகி உள்ளனர். குறிப்பாக 13 முதல் 18 வயதான பதின்ம ப‌ருவ வயதுடையவர்களே அதிக அளவில் மாயமாகி உள்ளனர். இவர்களில் 800-க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டும் இருக்கிறோம்'' என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “சிறுவர்கள் காணா மல் போவதற்கு பல காரணங்கள் இருந்தபோதும் வறுமை, குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, குடும்பச் சிக்கல், கொத்த டிமை, வேலையில்லா திண்டாட்டம், ஆள்கடத்தல், ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 18 வயதிற்கு குறைவான வர்களை பணியில் அமர்த்துவதை தடுக்கும் வகையில் அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x