

பாலியல் புகாரில் சிக்கி கோவா மாநிலம் சதா துணைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெஹல்கா நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பால் உள்ளிட்ட சில கைதிகளிடமிருந்து சிறை அதிகாரிகள் 7 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து துணை ஆட்சியர் கவுரிஷ் ஷங்க் வாக்கர் திங்கள்கிழமை செய்தியாளர் களிடம் கூறுகையில், "சதா துணைச் சிறையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஒன்று தேஜ்பாலிடம் இருந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டுவரப்படும்" என்றார்.
எனினும், தேஜ்பால் செல்போன் வைத்திருந்தாரா என்பதைத் தெரிவிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது. அதேநேரம் தேஜ்பால் அறையில் வேறு யாராவது இருந்தார்களா என்பதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.