Last Updated : 26 Nov, 2014 08:40 PM

 

Published : 26 Nov 2014 08:40 PM
Last Updated : 26 Nov 2014 08:40 PM

427 அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அருண் ஜேட்லி

மக்களவையில் இன்று கருப்புப் பண விவகாரம் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்விகளை எழுப்ப, அருண் ஜேட்லி அதற்கு பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அருண் ஜேட்லி, “அயல்நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் அடையாளம் காணப்பட்ட 427 கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபப்ட்டுள்ளன.

இதில் கணக்கு வைத்துள்ள 250 பேர் தங்களது அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் பற்றி ஒப்புக் கொண்டுள்ளனர்.

அடுத்த சில வாரங்களில் மேலும் சில அரசு தரப்பு வழக்குகள் தொடரப்படுகிறது. விசாரணைக்கு இந்த வழக்கு வரும்போது பெயர்கள் தானாக வெளியாகும்.

கருப்புப் பண விவகாரத்தில் நாங்கள் மிகவும் செயலூக்கமாக இருந்து வருகிறோம்; நடைமுறைகள் காலம் எடுக்கும், ஆனால் அப்பழுக்கற்ற நடைமுறை கடைபிடிக்கப்படும்.” என்றார் அருண் ஜேட்லி.

லோக்சபாவில் கறுப்பு பணம் மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுங்கள். கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக எத்தனை நாடுகளுடன் பிரதமர் பேசி உள்ளார் என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

எங்களின் நடவடிக்கை குறித்து கேள்வி கேட்ட பாஜக இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது. 100 நாட்களில் கறுப்பு பணத்தை கொண்டு வருவதாக கூறினார்களே, அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும் இன்னும் கறுப்பு பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடன் கூறிய பொய்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி, கருப்புப் பணம் மீட்கப்பட்டால் ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 அல்லது ரூ.20 லட்சம் பணம் வைக்க முடியும் என்றும் கூறியது குறித்தும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகத் தாக்கி பேசினர்.

அருண் ஜேட்லி தனது பதிலை முழுமையாக முடிக்கும் முன்னரே காங்கிரஸ், திரிணமூல், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x