

அக்டோபர் 2ம் தேதி மத்திய அமைச்சரவை கூடுகிறது. இக் கூட்டத்தில், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதை முறியடிக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவதா, வேண்டாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
கடந்த 27ம் தேதியன்று டெல்லியில் காங்கிரஸ் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாகக் கருத்து தெரிவித்திருந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய முடிவுக்கு எதிரான கருத்தை, ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியேதாடு காங்கிரஸுக்கு இக்கட்டான சூழலையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் வருகிற 2ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சைக்குரிய அவசரச் சட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.