தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போவது வழக்கமாகி வருகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போவது வழக்கமாகி வருகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
Updated on
1 min read

தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாமல் போவது என்பது ஒரு வழக்கமாகி வருகிறது. தேர்தல் அறிக்கைகள் வெற்றுக் காகிதமாகி வருகிறது, அரசியல் கட்சிகளை தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறும்போது, “இப்போதெல்லாம் தேர்தல் அறிக்கை என்பது வெற்றுக் காகிதங்களாகி வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளை பொறுப்பாக்க வேண்டும், அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணரச் செய்ய வேண்டும்” என்றார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பேசிய தலைமை நீதிபதி கேஹர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவெற்ற கட்சினரிடம் கருத்து ஒருமித்தல் இல்லை என்ற ‘நாணங்கெட்ட’ சாக்குப்போக்குகளைக் கூறுவது வழக்கமாகி வருகின்றன. குடிமக்கள் மறதி காரணமாக தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் ஆட்சி அமைத்தவுடன் மறந்து விடுகின்றனர் ஆனால் கட்சிகளைத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்பாளிகளாக்க வேண்டும்.

2014 தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் ஒன்று கூட தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கும் நலிவுற்றோருக்கான சமூக-பொருளாதார நீதியை உத்தரவாதம் செய்யும் அரசியல் சாசன லட்சியத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தவேயில்லை.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி இந்திய தேர்தல் ஆணையம் இலவசங்களுக்கு எதிராக திட்டங்களை வகுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார் நீதிபதி கேஹர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, கூறும்போது, “தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் நிற்பது ஏதோ முதலீடு அல்ல என்பதை வேட்பாளர்கள் தங்கள் மனதில் இருத்திக் கொள்வது நல்லது. தேர்தல்களை நடத்துவது என்பது குற்றங்களுக்கு வழிவகை செய்யக் கூடாது, மக்கள் வேட்பாளர்களை அற மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமே தவிர போட்டி ரீதியான அனுகூலமின்மைகளை வைத்து வாக்களிப்பதை தீர்மானிக்கக் கூடாது, வாக்காளர் எந்த ஆசைக்காட்டுதலுக்கும் பணியாமல் வாக்குச்சாவடிக்குச் செல்லும் நாள் ஜனநாயகத்திற்கு சிறந்த நாள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in