

அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையின் பல்வேறு நிலைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர் கெடு கிறது. நாடு முழுவதிலும் 5.42 லட்சம் காவல் பணியிடங்கள் காலியாக உள்ளன என மனுதாரர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
காவல் துறையில் பணியிடங்கள் காலியாக இருப்பது முக்கிய பிரச்சினையாகும். இதுபற்றி 4 வாரங்களுக்குள் மாநில அரசுகளின் உள்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஏதோ காரணத்தால் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாத மாநிலங்கள் சம்பந்தப்பட்ட உள்துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றிய தகவலை உடனடியாக மாநில அரசுகளின் உள்துறை செயலர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.