Last Updated : 27 Jul, 2016 10:38 AM

 

Published : 27 Jul 2016 10:38 AM
Last Updated : 27 Jul 2016 10:38 AM

தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு ஒப்புதல் அவசியம்: யுஜிசி சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு

தொலைதூரக் கல்வியின் அனைத்து பாடங்களுக்கும் பல்கலைக்கழகங்கள் தங்கள் ஒப்புதலை பெறவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு பல் கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு வரை, தொலைதூரக்கல்வி பாடங் களுக்கு தொலைதூரக் கல்வி கவுன்சிலின் (டி.இ.சி) அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இந்திரா காந்தி திறந்தவெளி பல் கலைக்கழக (இக்னோ) சட்டப்படி இந்த டி.இ.சி. உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.

தொலைதூரக் கல்வி நிலையங்களை பல்கலைக் கழகங்கள் தொடங்கும்போது, இக்னோவிடம் அனுமதி பெற வேண்டி இருந்தது. இது குறிப் பிட்டப் பாடப்பிரிவுகளுக்கு என் றில்லாமல் அந்த கல்வி நிலையத்துக்கு என மொத்தமாக அனுமதி பெறப்பட்டு வந்தது. தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கு மட்டும் அவை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தனியாக அனுமதி பெற வேண்டி இருந்தது.

இந்த நிலையில், தொலைதூரக் கல்வி நிலையங்களில் நடை பெறும் தவறுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதனால் கடந்த 2012-ல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவின் பேரில் யுஜிசி.யின் நிர்வாகத்தின் கீழ் டி.இ.சி. கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு டி.இ.சி.யின் நிர்வாகத்தை கண்காணிக்க தொலைதூரக் கல்வி அமைப்பை (டி.இ.பி) யுஜிசி அமைத்தது.

கடந்த மார்ச் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டி.இ.பி. அனுப்பிய சுற்றறிக்கை யால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதில் தொலைதூரக் கல்வி நிலையம் நடத்தும் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அதன் ஒவ் வொரு பாடப்பிரிவுக்கும் தன்னிடம் ஒப்புதல் பெற வேண்டும் என டி.இ.பி. கூறியிருந்தது. இந்த உத் தரவை எதிர்த்து பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் யுஜிசிக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஒவ்வொரு மாநிலத் திலும் பல்கலைக்கழக சட்டப் படி தொடங்கப்பட்ட பல்கலைக் கழங்கங்கள் தொடங்கும் பாடப் பிரிவுகளுக்கு யுஜிசியிடம் தனி யாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் தொலை தூரக் கல்வி நிலையங்களை தொடங்குவதற்கு மட்டும் அனுமதி பெறவேண்டுமே தவிர, அதன் பாடப்பிரிவுகளுக்கு அல்ல. அதேசமயம் வகுப்பறைக் கல்விப் பாடப்பிரிவுகளுக்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என யுஜிசி கேட்பதில்லை. எனவே, யுஜிசியின் புதிய உத்தரவு முரண்பாடாக இருப்பதால் அதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

இந்நிலையில் பல்கலைக் கழங்களின் எதிர்ப்பு குறித்து விசா ரித்து டி.இ.பி. முடிவை மறுபரிசீ லனை செய்ய யுஜிசி ஒரு குழுவை அமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்துடன் தொலைதூரக் கல்வி யில் எம்.ஃபில் மற்றும் முனைவர் (பி.எச்டி) படிப்புக்கான அனுமதி யையும் மீண்டும் அளிக்க வேண்டும் என பல்வேறு பல்கலைக்கழகங் கள் கோரியுள்ளன. இந்தப் படிப்புகள் கடந்த 2009 முதல் தொலைதூரக் கல்வி முறையில் ரத்து செய்யப்பட்டு விட்டன. நாடு முழுவதிலும் தொலைதூரக் கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x