மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்த பாஜக தலைவர்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்த பாஜக தலைவர்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Updated on
2 min read

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என பாஜக இளைஞர் அணி தலைவர் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சூரி என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை அனுமன் ஜெயந்தி விழாவுக்காக இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்த முயன்றனர். இதற்கு போலீஸார் தரப்பில் அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி அரசின் இந்த நடவடிக்கைக்கு உ.பி மாநிலத்தின் பாஜக இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷ்னே கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். ‘‘பொதுமக்கள் மீது மம்தா அரசு காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துள்ளது. சிவப்பு சட்டை அணிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. மம்தா பானர்ஜி இஸ்லா மியர்களின் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவர்களுக்காக பரிந்து பேசுகிறார். ஆனால் இந்துக்களை மட்டும் கண்டு கொள்வதில்லை. ஏன் இந்துக்கள் மனிதர்கள் இல்லையா? அவர் கள் மீது இப்படித்தான் மனிதா பிமானம் இல்லாமல் தாக்குதல் நடத்துவதா? யாராவது மம்தாவின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு நான் ரூ.11 லட்சம் வெகுமதி வழங்குவேன்’’ என யோகேஷ் வர்ஷ்னே ஆவேசமாக பேசினார்.

சமூக வலைதளங்களில் அவரது இந்த பேச்சு வைரலாக பரவியதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த விவகாரம் வலுவாக எதிரொலித்தது.

மக்களவை நேற்று கூடியதும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கள் இப்பிரச்சினையை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசும், பாஜக இளைஞர் அணித் தலைவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது இந்த விவ காரத்தை எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுக்ஹேந்து சேகர் ராய், ‘‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு தீய சக்தி என பொதுமேடையில் பாஜகவின் இளைஞர் அணி தலைவர் பகிரங்க மாக விமர்சித்துள்ளார். தவிர அவரது தலைக்கு ரூ.11 லட்சம் வெகுமதியும் அறிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை தீய சக்தி என எப்படி விமர்சிக்கலாம்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘‘இத்தகைய விமர்சனங்கள் கடும் கண்டனத்துக்குரியது. மாநில அரசு அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது’’என்றார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ‘‘சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்’’ என்றார். இதேபோல் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மம்தா பானர்ஜி பதிலடி

முஸ்லிம்களை ஆதரிக்கும் வகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்பதாக பாஜக இளைஞர் அணி தலைவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர், ‘‘துர்கா பூஜையிலும் பங்கேற்பேன், ரம்ஜான் விருந்திலும் பங்கேற்பேன். கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் செல்வேன். என்னை யார் தடுப்பது?’’ என ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in