

மும்பை ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில், முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்கக் கோரிய மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் பெயரை நீக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) நிராகரித்தது. மேலும், விசாரணை பட்டியலில் சவானின் பெயர் நீடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.