

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் ஷீலா தீட்சித் கூறியதாவது:
வரவிருக்கும் டெல்லி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தேவையான உதவிகளைச் செய் வேன். கட்சி சார்பில் அளிக்கப்படும் உத்தரவுகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவேன். காங்கிரஸ் வெளியில் இருந்து அளித்த ஆதரவை பயன்படுத்தி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தத் தவறி விட்டனர். எனவே, கடந்த ஒரு வருடமாக நடைபெறும் குடியரசு தலைவர் ஆட்சி உட்பட டெல்லி வாசிகளின் அனைத்து இன்னல் களுக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் எடுத்த முடிவே காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஷீலாவை எதிர்த்துப் போட்டியிட்ட கேஜ்ரிவால் வெற்றி பெற்றார்.
பின்னர், அப்போதைய காங் கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சார்பில் கேரள ஆளுநராக ஷீலா தீட்சித் அமர்த்தப்பட்டார். மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்ற பின் வட கிழக்கு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப் பட்டதை ஏற்க மறுத்து தனது பதவியை ஷீலா ராஜினாமா செய்தார்.