

இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த தல்பீர் சிங் சுஹாக் 42 ஆண்டு கால பணிக்குப் பிறகு நேற்று ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தனது பொறுப்புகளை புதிய தளபதி பிபின் ராவத்திடம் ஒப் படைத்தார். நாட்டின் 27-வது ராணுவத் தளபதியாக பொறுப் பேற்றுக்கொண்ட பிபின் ராவத், காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங் களிலும் சிறப்பாக பணியாற்றியவர். 2008-ல் காங்கோவில் ஐ.நா. அமைதிப் பணியில் இந்தியப் படைக்கு தலைமை வகித்துள்ளார்.
பிரவீன் பக் ஷி, பி.எம்.ஹாரிஸ் ஆகிய இரு மூத்த அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு பிபின் ராவத்தை ராணுவத் தளபதியாக மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில் தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக இருக்கும் பிரவீன் பக் ஷி, புதிய தளபதிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
விமானப் படை தளபதி
இதுபோல் அரூப் ராகாவுக்கு பதிலாக விமானப் படையின் புதிய தளபதியாக வீரேந்தர் சிங் தனோவா பொறுப்பேற்றார். விமானப் படை யின் 25-வது தளபதியாக பொறுப்பேற்றுள்ள இவர், ஜாகுவார் விமானம் முதல் தற்போதைய நவீன விமானங்கள் வரை பணி அனுபவம் கொண்டவர்.