ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு: பிரதமர் மோடி தாஷ்கண்ட் சென்றார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு: பிரதமர் மோடி தாஷ்கண்ட் சென்றார்
Updated on
1 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு அந்நாட்டின் பிரதமர் ஷாவ்கத் மிர்சியோயவ் சிறப்பான வரவேற்பு அளித்தார். அணுசக்தி விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்த்து வருவதையடுத்து இந்த மாநாட்டில் சீன அதிபரையும் பிரதமர் மோடி சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

கடந்த மாநாட்டில் இந்த ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போதைய மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாஷ்கண்ட் செல்லும் முன் பிரதமர் மோடி கூறும்போது, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் உரையாட நான் உஸ்பெகிஸ்தான் செல்கிறேன். எஸ்சிஓவில் இந்தியா இணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்நாடுகளுடன் ஒத்துழைப்பு ஏற்பட்டால் நல்லது என்று கருதுகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in