காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புல்வாமா மாவட்டம் கங்கன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அந்தப் படுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சண்டையில் பலியான பயங்கரவாதியின் உடலும் அவரிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in