

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இவ்வழக்கு கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி 'தி இந்து'விடம் கூறியதா வது: கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்காக, கர்நாடக அரசு 3 கோடியே 93 லட்சத்து 5 ஆயிரத்து 915 ரூபாய் ஒதுக்கியது. இதில் நீதிபதியின் ஊதியம், அரசு வழக்கறிஞரின் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட 14 வகையான செலவினங்களுக் காக 2 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 616 ரூபாய் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செலவிட்டுள்ளது.
இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசா ரணை நடைபெற்றது. இதில் அரசு வழக்கறிஞர்களாக செயல்பட்டதற் காக 5 பேருக்கு 2 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 888 ரூபாய் கர்நாடக அரசு வழங்கியுள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவுக்கு ரூ.95 லட்சத்து 16 ஆயிரத்து 500, மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 18, வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டிலுக்கு ரூ 32 லட்சத்து ஆயிரத்து 70, உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவுக்கு ரூ.42 லட்சத்து 23 ஆயிரத்து 643, மாநில அரசு தலைமை வழக்கறிஞர் மதுசூதன் ஆர். நாயக்குக்கு 2 லட்சத்து 43 ஆயிரத்து 657 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசின் சட்டத்துறை அதிகாரி குருசித்தையா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இதே வழக்கில் விசாரணை நடை பெற்றது. இதற்காக கர்நாடக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கர்நாடக சட்டத்துறையிடம் கோரியுள்ளேன். 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதில் அளிக்க வில்லை. இதனால் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளேன்.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்காக கர்நாடக அரசு சுமார் ரூ.10 கோடி வரை செலவு செய்திருக்க வாய்ப்புள்ளது. இதில் கர்நாடக அரசு தமிழக அரசிடம் எவ்வளவு செலவு தொகையை வசூலித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ளேன். அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், ஜெயலலிதா, உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்காக கர்நாடக அரசு செலவு செய்த தொகையை தமிழக அரசிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என வலியுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.