Last Updated : 27 Nov, 2014 10:44 AM

 

Published : 27 Nov 2014 10:44 AM
Last Updated : 27 Nov 2014 10:44 AM

கருப்பு பண விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்கள்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தாக்கு

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் கருப்பு பண விவகாரம் தொடர்பான விவா தத்தை காங்கிரஸ் உறுப்பினரும் எதிர்க்கட்சி துணைத் தலைவரு மான ஆனந்த் சர்மா தொடங்கி வைத்து பேசியதாவது:

எதிர்க்கட்சியாக இருந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்து மக்களை தவறாக வழி நடத்தினார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரூ.85 லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இது நம் நாட்டின் 5 ஆண்டு பட்ஜெட்டுக்கு சமம் என்றும், இதை மீட்டால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

மத்தியில் பாஜக தலைமையி லான அரசு பொறுப்பேற்று சரி யாக 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மோடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, வெளிநாடுகளில் எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என தெரியவில்லை என்கிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதி அளித்திருந்தார். ஆனால் 6 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் புதிதாக எதையும் சாதிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கருப்புப் பண விவகாரத்தில் பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இருந்த நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. கூடுதலாக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசு விரை வாக செயல்பட்டு கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், “நாங்கள் பொய் சொல்லிவிட் டோம். இனி அரசு என்ற முறையில் முயற்சி செய்வோம்” என அறிவிப்பதுடன் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சர்மா தெரிவித்தார்.

427 பேருக்கு நோட்டீஸ்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய வங்கிக் கணக்கு வைத் துள்ள 427 இந்தியர்கள் அடையா ளம் காணப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 250 பேர் தங்களுக்கு வெளிநாடுகளில் கணக்கு இருக்கிறது என ஒப்புக் கொண்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளோம். குற்றச்சாட்டு பதிவு செய்ததும் அவர்களது பெயர்களும் வெளி யிடப்படும். கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது என்றார் ஜேட்லி.

காங்கிரஸ் வெளிநடப்பு

கருப்புப் பண விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வாதம் திருப்தி அளிக் காததால் காங்கிரஸ் உறுப்பினர் கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x