அதிகாரிகள் புள்ளிவிபரம்: அவகாசம் கோரியது அமெரிக்க தூதரகம்

அதிகாரிகள் புள்ளிவிபரம்: அவகாசம் கோரியது அமெரிக்க தூதரகம்
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிபவர்களின் விசா விபரம் உள்பட பல்வேறு தகவல்களை அளிக்க அவகாசம் கோரியுள்ளது அமெரிக்க தூதரகம்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிபவர்களின் விசா விபரம் உள்பட பல்வேறு தகவல்களை அளிக்குமாறு இந்தியா வலியுறுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியது. அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்தும் தகவலைத் தருமாறு கூறியது.

இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்திய அரசு கோரிய புள்ளி விபரங்களை ஒப்படைக்க மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in