

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதில் மூன்று வீரர்கள் காய மடைந்தனர்.
இதுகுறித்து குப்வாரா மாவட்ட காவல்துறை அதிகாரி நேற்று கூறியதாவது:
குப்வாரா மாவட்டம் நச்சின் கிராமத்தில் உள்ள பிஎஸ்எஃப் முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று வீரர்கள் காயமடைந்தனர். காய மடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிரவாதி களுக்கும், படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகளைச் செய லிழக்க வைக்க கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.